• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடவள்ளி ஆனந்தாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 குழுவினருடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

May 28, 2022 தண்டோரா குழு

புகழ்பெற்ற ஆனந்தாஸ் உணவகத்தின் கிளையில், கோவை வடவள்ளி, லட்சுமி மில்ஸ், சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் இன்று காலை 6 மணி முதல் 40 குழுவினருடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆனந்தாஸ் உரிமையாளர் மணிகண்டன் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.முன்னதாக வடவள்ளியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது,அங்கிருந்த நிர்வாகத்தினர் அடையாள அட்டை கேட்டு வெளியே நிற்க வைத்ததாகவும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளித்தாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் வந்த பிறகே வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க