• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – இந்தியில் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்

March 5, 2023 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள்,பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் பிகார் முதல்வரும் துணை முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.ஆனாலும் பிகார் உட்பட வட மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் பணியில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளில் இந்தி பேசக் கூடியவர்கள் இந்தியில் இந்தச் செய்தியை வீடியோவாகப் பதிவிட்டும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க