• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடகிழக்கு பருவமழை எதிரொலி டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

November 5, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி,தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்துகளை ஊற்றுகின்றனர். அதேபோல், வீட்டில் மற்றும் அருகில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கோவை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 10 பேர் என 100 வார்டுகளில் 1000 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும் படிக்க