January 18, 2021
தண்டோரா குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும்.. ஆனால் தற்போது மாஸ்டர் படம் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலரை வசூலித்து முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வார இறுதியில், மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற படம் 11.75 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.