• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது

March 20, 2019 தண்டோரா குழு

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு , கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி லண்டனில் இருப்பது தெரியவந்தது. மேலும், லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் லண்டனில் உள்ள பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதற்கிடையில், நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சகம், இரண்டு நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்ததாக, அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மார்ச் 25ஆம் தேதி நீரவ் மோடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். நிரவ் மோடி கைதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க