• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு தப்புவதை தடுக்க உயர்நீதிமன்றம் புது யோசனை!

December 31, 2018 தண்டோரா குழு

வங்கிகளில் பல ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்போயோடுவது தொடார் கதையாகி விட்டது. இதனை தடுக்கும் பொருட்டு வங்கிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய யோசனையை வழங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர்கள் சிலர் இந்திய வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுவது சமீபகாலமாக தொடர்ச்சியாக நடந்துகொண்டிருகிறது. இதற்கிடையில், இதனைத்தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு யோசனையை கூறியுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அங்கன்வாடி பணியாளர் மங்களம், அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, பணிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

அதவாது, ” கடன் பெறுவோர் வங்கிகளில் பாஸ்போர்ட்-டை சமர்ப்பிக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். விதிகளை திருத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் பகுதிநேர ஊழியராக இருந்தாலும் அர்பணிப்பு மனப்பான்மை இருக்க வேண்டும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க