March 12, 2018
தண்டோரா குழு
வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு வந்த வங்கதேச விமானம் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.
வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்து விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 17 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து,வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.