• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்

December 2, 2021 தண்டோரா குழு

வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் ‘ஜாவத்’ புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க