April 19, 2018
தண்டோரா குழு
லோக் ஆயுக்தா தொடர்பாக தமிழக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ கடந்த 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இது,2014 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.இதன்படி,நாட்டிலேயே முதன் முதலில் மகாராஷ்ராவில் தான் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது.
ஆனால்,தமிழகம்,புதுவை,ஜம்மு காஷ்மீர்,மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,நாகலாந்து,தெலங்கானா, திரிபுரா,அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.
இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது.அப்போது,‘லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? அவை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை 12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து,தமிழக அரசு சார்பில் தமிழக செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 9 பக்கங்கள் கொண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை இன்று விசாரித்த ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் அமர்வு,தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும்,தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ளநேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி.இந்த அரசு,உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்படமக்கள் வலியுறுத்த வேண்டும்.லோக் ஆயுக்தா,ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து எனக் கூறியுள்ளார்.