March 19, 2018
தண்டோரா குழு
லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சில ஆண்டுகளாக வீரவைச-லிங்காயத்து வகுப்பை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை சில மடாதிபதிகள் முன் வைத்தனர். கடந்த 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், ஆன்மிகத்துடன் சமூக முற்போக்கை ஏற்படுத்தியவருமான பசவண்ணரின் தத்துவங்களை இவ்வகுப்பினர் மேற்கொண்டு வருவதால், முழுக்க முழுக்க சிவபெருமானை வழிபடுகிறார்கள். கர்நாடாகவில் லிங்காயத் சமூகத்தினர் 11.5 % முதல் 19% மக்கள் தொகை உள்ளனர். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110ல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்து இன மக்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.