• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரி மோதி மாணவன் சாவு

November 11, 2021 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.‌ கூலி தொழிலாளி. இவரது மகன் சர்வேஸ்வரன் (8). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.

மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வேனில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வீட்டின் அருகே வேனில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியது.‌ இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் சர்வேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க