• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘லவ் பேர்ட்ஸ்’ பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை

October 8, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆசையாக வளர்த்த ‘லவ் பேர்ட்ஸ்’ பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள வெள்ளமடை தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(46). விவசாயி. இவரது மகள் பிரியா(18). பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது வீட்டில் கூண்டு வைத்து அதில் ஆசையாக ‘லவ் பேர்ட்ஸ்’ வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கூண்டில் இருந்த லவ் பேர்ட்ஸ் பறந்து சென்றது.

ஆசையாக வளர்த்த பறவைகள் பறந்து சென்றதால் பிரியா மன வேதனை அடைந்தார். இதனால் அவரது பெற்றோரிடம் வேறொரு லவ் பேர்ட்ஸ் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த பிரியா வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று வீட்டில் விஷம் குடித்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லவ் பேர்ட்ஸ் பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க