August 26, 2021
தண்டோரா குழு
லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் கிங்ஸ் 2021ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள
கோ இந்தியா கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் 21- 22ம் ஆண்டிற்கான
தலைவராக துரை சந்திரன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ரியல் லயன்ஸ் மனிதாபிமான விருது எஸ். பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.
கோவிட் 19ன் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளுக்காக இந்த விருது வழங்கப் பட்டது.
இந்த விருதினை முன்னாள் மாவட்ட கவர்னர் எல். தர்ம ராஜ் வழங்கினார்.நிழ்ச்சி முன்னாள் மாவட்ட ஆளுநர் எம்.வேலுசாமி, மற்றும் டி.எஸ்.விஜயகுமார்,மற்றும் சிஜிவி.கணேசன் மற்றும் எல்என்.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் கிங்ஸ் லயன்ஸ் கிளப்பின் சேட்டர் தலைவர் டி.ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும்,கோவிட் 19ன் போது தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கியதற்காக பி.எம்.மணிக்கம், ஒன்.உதயம் சீனிவாசன் ஆகியோரும் விருது
வழங்கப்பட்டது.