September 4, 2025
தண்டோரா குழு
லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 1D லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் சார்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் அமைந்துள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியவர் இல்லத்தில் நடைபெற்றது.
கோவைப்புதூர் எம்.எஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அரிமா சண்முகம், மனோன்மணி சண்முகம் மற்றும் சந்தோஷ் மல்லையா ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.கே ஆறுமுகம் கலந்துகொண்டு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா எம்.ரமேஷ், அரிமா ஜெகதீசன்,அரிமா டாக்டர் சாரதா, அரிமா சந்திரசேகர், அரிமா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியினை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் தலைவர் அரிமா டி ஜி எஸ் பொன்னம்பலம் ஒருங்கிணைத்தார்.