March 8, 2018
தண்டோரா குழு
லஞ்சப் புகாரில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி மற்றும் உதவி செய்ததாக தர்மராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கணபதி இருமுறை கோவை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முறையிட்டார். ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், தினமும் 2 முறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும், கோவை மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது; வெளியே செல்வதாக இருந்தால் முன் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.