• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

November 2, 2020 தண்டோரா குழு

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் ” லஞ்சம் வாங்காதே, லஞ்சம் வாங்கியவர்கள் நிம்மதியாக உறங்கியது இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சி ஊழியர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

இந்த பேரணியானது கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஊழலில்லா நிர்வாகத்தை தர வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற காலங்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாநகராட்சி சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும், அந்த குழுவின் மூலம் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கின்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும், அபராதம் விதிக்கப்பட்டும் அரசு கூறிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் கடையை ஓரிரு நாட்கள் அடைக்க உத்தரவு பிறப்பிக்கபடும் என்று தெரிவித்தார்.இந்நிகழ்வின் பொழுது மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க