• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் துவக்கம்

September 25, 2021 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம் சார்பில் வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் துவக்கம். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கிவைத்தார்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பில் கோவை மாவட்டம், கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண். 34-க்கு உட்பட்ட வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் இன்று (25.09.2021) துவக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தை மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். மேலும் விழாவில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா மற்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.என். கீதா ஆகியோர் கலந்து கொண்டனார்.

இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் பாவிக் மொமயா கூறும்போது :

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் மற்றும் அதன் நிறுவன சமூக பொறுப்பு இணையான பேக்கர் அண்டு ஹியூக்ஸ் உடன் இணைந்து வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 35 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறையை கட்டியுள்ளது. இந்த புதிய வசதிகள் இப்பள்ளியில் படிக்கும் 305 மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இந்த விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் பாவிக் மொமயா, செயலாளர் ரோட்டேரியன் டி. முரளி பாலகிருஷ்ணன், கோவை ஈச்சனாரி, பேக்கர் அண்டு ஹியூக்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலை மேலாளர் (தயாரிப்பு) மணிஷ் காஷ்யப், ரோட்டரி 3201 மாவட்ட சமூக சேவை தலைவர் ரோட்டரியன் எஸ். சுப்பரமணியம், ரோட்டரி மாவட்டம் 3201 மண்டலம் 1 இயக்குனர், ரோட்டரியன் திரு.பி. குமரேசன், ரோட்டரி மாவட்டம் 3201, வகுப்பறை புனரமைப்பு மற்றும் கட்டுமானம் மண்டல தலைவர் ரோட்டரியன் ஸ்ரீதர், வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், திட்ட ஒரங்கிணைப்பாளர் ரோட்டேரியன் சம்பத்குமார் வேலுசாமி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் வீரியம்பாளையம் ஊராட்சி பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க