June 26, 2021
தண்டோரா குழு
நோயாளிகளுக்கு கடுமையான இரத்த
பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, ரோட்டரி கிளப் ஆஃப்மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோயம்புத்தூர்
கிளையும் இணைந்து கோயம்புத்தூர்
ஐ.எம்.ஏ ஹாலில் சிறப்பு
இரத்ததான முகாம் ஒன்றினை நடத்தியது.
ரோட்டரி மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்க பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் மற்றும் சுகாதார துணை இயக்குநர் டாக்டர் எஸ்.செ ந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் இன்று 150 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் கோவை மருத்துவ கல்லூரி இரத்த வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிக்கில் கூறுகையில்,
இந்த தொற்று நோய்களின்
சூழ்நிலையில் ரத்தத்தின் தேவைக்கு
ஒப்பிடும் போது இரத்த தானம் குறை வாகிவிட்டது.இதனால் ரோட்டரி மெரிடியனைச் சேர்ந்த நாங்கள் ஐ.எம்.ஏ இரத்த வங்கியுடன்
இணைந்து சிறப்பு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த நேரத்தில் பல உடல்நல சிக்கல்களால் பலருக்கு இரத்த பற்றாக்குறை ஏற்படுவதைக் காணலாம். எனவே நாங்கள் நோயாளிகளுக்கு தேவைப்படும் இரத்தத்தை கொடுக்க
ஒரு சிறிய நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்றார்.