• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டம் துவக்கம்

November 21, 2023 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் பல ஆண்டுகளாக பின்தங்கிய மக்களுக்காக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாக உள்ளது.இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டம் துவங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் துவக்க விழா, கோவை காஸ்மோபாலிட்டன் கிளப் ஜிவி ஹாலில் இன்று நடைபெற்றது.ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயக்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திட்டத்தை துவக்கிவைத்தனர்.

ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டத்தின் தலைவர் ஏ. காட்வின் கூறுகையில்,

“ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுனின் இந்த திட்டம் உலக நிதியில் செயல்படுத்தப்படுகிறது. கொச்சுவுசப் தாமஸ் சிட்டிலப்பள்ளி பரிசு திட்டம், அமெரிக்காவின் ஜெர்மன்டவுன் ரோட்டரி கிளப் (மெம்சிஸ்) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இவை, மூட்டு உள்பகுதியில் ஏற்படும் தசையின் காயங்களை குணப்படுத்த நுண்துளை அறுவை சிகிச்சைக்கு இலவசமாக உதவுகின்றன.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன், 40 லட்சம் ருபாய் மதிப்புள்ள இது, சர்வதேச நிதியில் பெறப்படும் இரண்டாவது திட்டம். கோவை விஜிஎம் மருத்துவமனையில் நடத்தப்படும் இந்த திட்டம், டாக்டர் சுமன் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் நடக்கிறது. இரண்டு வகையாக இது அமல்படுத்தப்படுகிறது.முட்டு வலியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு வகையும், இதே வலியால் தினமும் அவதிப்படும் நிதிவசதியற்றவர்களுக்கு இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முதல் பயனாளியாக அன்னூரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரரும், வெல்டிங் தொழில் செய்து வருபவருமான ராஜதுரை தேர்வாகியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின் இவர் தற்போது நடக்க தொடங்கியுள்ளார்.இந்த சிகிச்சையை பெற விரும்புவோர் முதலில் தங்களது செலவில் முழங்கால் மூட்டில் ஏற்பட்டுள்ள சவ்வு கிழிப்பை ஸ்கேன் செய்து பின்னர் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனை அனுகவேண்டும்.

பின்னர், இந்த திட்டத்தின் தலைவர் மற்றும் குழுவினர்,விஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வர்.
மருத்துவமனையிலிருந்து திட்ட தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதேசமயத்தில், ஆர்சிடி குழுவினர், பாதிக்கப்பட்டவர், உண்மையிலேயே ஏழ்மையில் உள்ளவரா என்பதை சரிபார்க்கும். இரண்டும் சரிபார்க்கப்பட்ட பின், இலவச சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு முன் உள்ள செலவுகள், அறுவை சிகிச்சைக்கான செலவு, அறை வாடகை முதல் இயல்முறை சிகிச்சை மற்றும் அடுத்த 3 மாதங்களுக்கான மருந்துகள் செலவு போன்ற அனைத்து செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு (22-23) ஆர்சிடி தலைவர் சுந்தர் தலைமையில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தில், செயலாளர் குமரன், தலைவர் காட்வின் இடம் பெற்றுள்ளனர்.

ரோட்டரி கவனர் ராஜ்மோன் நாயர் மற்றும் செல்லா ஆகியோரின் ஒப்புதலோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் தூண்களாக, விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜி மோகன் பிரசாத், டாக்டர் சுமன் திகழ்கின்றனர். ரோட்டரி கிளப் ஆஃப் டவுன்டவுன் லிம்ப் 2 ரன் திட்டத்தின் தலைவர் ஏ. காட்வின், தற்போதைய கவர்னர் ரோட்டரி விஜயக்குமார் (ஆர்ஐடி 3201), ஆர்சிடி தலைவர் மோகன்ராஜ், செயலாளர் குகன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உதவி வருகின்றனர்.

திட்டத்தின் துணைத்தலைவர் ஷியாம், அடுத்த ஆண்டின் (24-25) தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். அனைத்து ஆவண பணிகளையும் மேற்கொள்ள சுமித் மற்றும் டாக்டர் சுமன், முன்னாள் தலைவர்கள் பாலாஜி, சதீஷ், விஜயராகவன், பிரகாஷ் உள்ளிட்டோர் ஆதரவளித்து வருகின்றனர்.

மேலும் விழாவிற்கு சிறப்பு அழைப்பளர்களாக வி.ஜி.எம் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத், ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரா, ரோட்டேரியன் எஸ். கோகுல்ராஜ், ரோட்டேரியன் பி. இளங்கோ மற்றும் ரோட்டேரியன் பி. பாலாஜி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ரோட்டேரியன் மோகன்ராஜ், ரோட்டேரியன் குஹன், டாக்டர் சுமன், பொருளாளர் ரோட்டேரியன் விக்னேஷ். ஐபிபி ரோட்டேரியன் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க