November 18, 2021
தண்டோரா குழு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர் சிம்பு,
ரொம்ப கஷ்டமா இருக்கு ; நிறைய பிரச்னை கொடுக்குறாங்க.பல பிரச்சினைகளை தாண்டி மாநாடு வந்துள்ளது. நான் மாநாடு படத்தில் நடிக்க காரணம் ‘அப்துல்காலிக்’ என்கிற கதாபாத்திரம் தான். இந்த திரைப்படத்தில் நிறைய காயங்கள் ஏற்பட்டன. “பிரச்சினைகளை நான் பார்த்து கொள்கிறேன். என்னை நீங்க பார்த்துக்கோங்க” என ரசிகர்களிடம் சிம்பு உருக்கமாக கண்ணீர் மல்க பேசினார்.