March 29, 2021
தண்டோரா குழு
நான் வெற்றி பெற்றால் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில்தோட்டக் கழிவு மேலாண்மை குறித்தும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மநீதி தலைவர் கமலஹாசன் உறுதி அளித்தார்.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளரான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை பந்தயசாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது ரேஸ் கோர்ஸ் பகுதி மக்கள் நலசங்கத்தினரிடம் அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
தோட்டக்கழிவுகள் அதிகளவு இந்த பகுதியில் சேர்வதாகவும் அதனை முறையாக மேலாண்மை செய்து இயற்கை உரமாக மாற்ற நடகடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போக்கு வரத்து நெரிசலை குறைக்க வாகன நிறுத்துமிடம் அமைத்து அதனை முறையாக கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தான் வெற்றி பெற்றால் தோட்டக் கழிவு மேலாண்மை குறித்தும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் மற்றும் சுஹாசினி அவருடன் இருந்தனர்.