• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் வீணாகும் தண்ணீர் !

February 11, 2023 தண்டோரா குழு

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி என்பது கோவை மாநகரின் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டன.மேலும் பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

மேலும் பொழுதுபோக்கிற்காகவும் பல்வேறு பொதுமக்கள் அங்கு வருகை புரிகின்றனர். மேலும் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேறியது. அதுமட்டுமின்றி குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான குடிநீர் வீணாகியது.

தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் உடைப்பை தற்காலிகமாக அடைக்க முயன்ற போதிலும் அடைக்க முடியாமல் போனது. தற்பொழுது அதிகப்படியான நீர் வெளியேறி வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்யும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழாய்கள் பொருத்தப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தரமான குழாய்களை சரியான முறையில் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க