March 1, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் 1.8 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. மார்ச் 1-ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டு பெறாதவர்கள் பழைய ரேஷன் கார்டுகள் போலி என கணக்கில் கொண்டு நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. பின்னர், புதிய ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்மார்டு கார்டுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொது விநியோகத்துறை, அனைத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பழைய ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.