• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளுக்கு முன் போராட்டம் – மு.க. ஸ்டாலின்

March 7, 2017 தண்டோரா குழு

ரேஷன் கடைகளுக்கு முன் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில்,

“ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டப் பேரவை திமுக உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என்று உறுதியாக்கப்பட்டது.

அதையடுத்து அதிமுக அரசு மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசியமான பொருள்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்கு சரிவர உணவு வழங்கத் தவறிய அதிமுக அரசை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடை முன்பாக இம்மாதம் 13ம் தேதி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க