• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை கால அவகாசம் வேண்டும்

December 30, 2016 தண்டோரா குழு

ரேஷன் கடைகளில் மார்ச் 1ம் தேதி 2017ம் ஆண்டு முதல் மின்னணு பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்த கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி , 2017ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் மின்னணுப் பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்துவது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக, மின்னணுப் பரிவர்த்தனை குறித்து நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மின்னணுப் பரிவர்த்தனை குறித்து மக்களிடையே தெளிவை ஏற்படுத்திய பிறகு அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கேற்ப கால அவகாசம் தேவை.

பிரதமர் திடீரென்று கடந்த நவம்பர் 8 ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். முன்னேற்பாடில்லாத, அவசர நடவடிக்கையால் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு, இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

தற்போது மத்திய அரசு ரேஷன் கடைகளில் மின்னணுப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதால், இத்திட்டம் இத்தகைய குறைவான காலத்திற்குள் முறையாக, முழுமை பெறுமா என்ற பெரும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிற இச்சூழலில் மின்னணுப் பரிவர்த்தனையைத் திணிக்க மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது.

முக்கியமாக, மத்திய அரசு பணத் தட்டுப்பாட்டுப் பிரச்சினையையும், சில்லறைப் பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன் பிறகே இந்த மின்னணுப் பரிவர்த்தனை முறையைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

மின்னணுப் பரிவர்த்தனையைக் கட்டாயமாக்குவதற்கு முன்பு தேவையான முன்னேற்பாடுகளையும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியான செயல்திட்டங்களையும் வகுத்து, முறைப்படுத்திய பிறகே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசு ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க