• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் -அமைச்சர் சக்கரபாணி தகவல்

January 7, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம், 80 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பரிசு தொகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார்.அதன்பின், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். கிடைக்கப் பெறாதவர்கள் 13ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 288 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1404 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அனைத்து கடைகளிலும் 100 சதவீதம் பொருட்கள் வந்துவிட்டது. 10 சதவீதம் மட்டும் கரும்பு வர வேண்டி உள்ளது.2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் சத்துமிக்க உணவுப்பொருட்கள சிறப்பு பொதுவிநியோக திட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிந்துரை செய்யப்படும். கடந்த ஆட்சியில் துண்டு கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு முழு கரும்பு வழங்க உள்ளது.

வயல்வெளி மற்றும் கூலி வேலை செய்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான கருவிகள் வாங்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

பேட்டியின்போது கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க