• Download mobile app
12 Oct 2026, MondayEdition - 3897
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேசன் கார்டுகளுக்கு டாட்டா..பாய்..பாய்

April 1, 2017 தண்டோரா குழு

நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவை இன்று(ஏப்ரல் 1) சென்னை கொரட்டூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா தனது 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இத்திட்டம் வருவதற்கு காலதாமதம் ஆன காரணத்தினால் குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்டியே ஆண்டுகள் கடந்தன.

இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 330 கோடி செலவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தைத் சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் கார்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி இன்னும் நிறைவடையாத காரணத்தால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உடனே வழங்க இயங்கவில்லை.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் “ஸ்மார்ட் கார்டு வரும் வரையில் பழைய அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் “ என்றார்.

மேலும் படிக்க