• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது

June 5, 2025 தண்டோரா குழு

ரெனாட்டஸ் குழுமத்தின் அங்கமான ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் கோவையில் இன்று அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது.

கட்டுமான பொருட்கள் துறையில்’ரெனகான் ஏ.ஏ.சி பிளாக் போன்ற தனித்துவம் கொண்ட தயாரிப்பை அறிமுகம் செய்து இந்த துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய இந்த நிறுவனம் தற்போது “ஃபைபர் சிமெண்ட் போர்ட்” எனும் அதன் புது தயாரிப்பையும், நிறுவனத்தின் அடுத்த இலக்குகள் குறித்தும் கோவையில் இன்று (5.6.25) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்டது.

தற்போது இந்நிறுவனம் வழக்கமான செங்கல்களுக்கு மாற்றாக ஏ.ஏ.சி பிளாக் என்கிற தயாரிப்பையும், ரெனாகான் ராப்பிட் வால் ரெடி மேட் சுவர் பகுதிகளையும், மேலும் tile adhesive, wall putty, AAC Joint Mortar, Ready Mix Plaster, Block Jointing Mortar, Floor top hardner போன்ற பொருள்களை உருவாக்குகிறோம். பல்வேறு கட்டுமான களவைகளையும், தளங்களின் டைல்ஸ்களை ஒட்ட பயன்படுத்தும் பசை ஆகியவற்றை உருவாக்குகிறது.

தற்போது ” ஃபைபர் சிமெண்ட் போர்ட்” எனும் புது தயாரிப்பை இந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

இதன் தனித்துவம் கொண்ட தன்மைகளால் இது வழக்கமான பிளை உட், ஜிப்சம் போர்டுகள் மற்றும் கால்சியம் சிலிக்கேட் வகை போர்டுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

இந்த தயாரிப்பை கொண்டு முதல் 2 ஆண்டுகாலத்தில் உள்நாட்டு சந்தையில் இது போன்ற பொருட்களுக்கு உள்ள 5-8% இடத்தை கைப்பற்றவும், தெற்கு ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற சர்வதேச சந்தைகளுக்கு இதை ஏற்றுமதி செய்யவும் நிறுவனத்தால் திட்டமிடப்பட்டு உள்ளது.

விரிவாகத்தை பொறுத்தவரை, ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் ஏ.ஏ.சி பிளாக் உற்பத்தி மையங்களை தென்னிந்தியா, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 3 புது உற்பத்தி மையங்களை இந்தியாவின் பிற பகுதிகளில் அமைக்கவும், 2030க்குள் அதன் வருமானத்தை ரூ.350 கோடியில் இருந்து ரூ.1000 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதன் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க, நாடு முழுவதும் உள்ள அதன் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தொடர்புகளை அதிகரிக்க உள்ளது. 2028க்குள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அவசியமான பொருட்களை வழங்கும் தொடர்புகளை மிக பலம் வாய்ந்ததாக மாற்ற திட்டமுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பொருட்கள் நாடு முழுவதும் கிடைக்கும் படி முயற்சிகள் எடுக்கப்படும்.

மேலும் படிக்க