December 28, 2025
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் முகம் – தாடை மற்றும் முக அழகு அறுவை சிகிச்சை மற்றும் பல் மருத்துவத்துறை இன்று துவங்கப்பட்டது.
இத்துறையை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் மனோகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கே.எம்.சி.எச் மருத்துவமனையின் முக மற்றும் வாய் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் சரவணன் பல் மருத்துவத்துறையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில்,துறை தலைவர் மற்றும் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர்
டாக்டர் பிரீதா ஆனந்த் மற்றும் ரெக்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் பிரீதா ஆனந்த் கூறுகையில்,
“நான் AIIMS போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் Oral & Maxillofacial Surgery துறையில் MDS பயிற்சி பெற்றுள்ளேன்.CCI–Switzerland-இல் உள்ள சர்வதேச அளவில் அறியப்பட்ட FCLPS நிறுவனத்தில் advanced Facial Plastic Surgery பயிற்சியை முடித்துள்ளேன். இதன் மூலம் craniofacial மற்றும் cleft care போன்ற துறைகளில் உலகளாவிய NGO அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளேன்.
தாடை திருத்தச் சிகிச்சை (Jaw correction) என்பது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல; அது பேசுதல், உணவு மெல்வது, சுவாசம், airway மற்றும் முகத்தின் செயல்பாடு ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது. அதேபோல் Rhinoplasty, முக அழகியல் மற்றும் temporomandibular joint (TMJ) தொடர்பான வலிகளுக்கும் முறையான சிகிச்சை மிக முக்கியமானது.
இந்தியாவில் cleft lip மற்றும் cleft palate போன்ற பிறவியிலேயே ஏற்படும் முகக் குறைபாடுகள் ஒரு பெரிய சுகாதார சவாலாகவே இருக்கின்றன. சுமார் 800–1000 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பிரச்சினை காணப்படுகிறது. சரியான நேரத்தில் பல்துறை மருத்துவ அணுகுமுறையுடன் சிகிச்சை அளித்தால், இந்த குழந்தைகளின் வாழ்க்கை முழுமையாக மாறக்கூடும். இதுபோன்ற பிற congenital facial deformities-க்கும் முழுமையான சிகிச்சை வழங்க முடியும்.
மேலும், முக எலும்பு காயங்கள், cyst மற்றும் tumour அகற்றுதல், முகத் தொற்றுகள், scar revision, தாடை மற்றும் TMJ தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் எங்கள் பிரிவு முழுமையான சிகிச்சை அளிக்கிறது. ஏற்கனவே சிறப்பாக இயங்கி வரும் ஒரு orthopaedic மருத்துவமனையின் பகுதியாக இருப்பதால், trauma, jaw correction மற்றும் TMJ management போன்ற சிகிச்சைகளில் பல்துறை ஒருங்கிணைந்த சேவையை வழங்க முடிகிறது.
இதனுடன், முழுமையாக வசதிகளுடன் அமைக்கப்பட்ட Department of Dentistry மூலம் அனைத்து dental specialties-யிலும் ஒரே இடத்தில் முழுமையான பல் சிகிச்சை வழங்கப்படுகிறது.மேலும், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு வார்டுகள் அறுவை சிகிச்சை மையம் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.