• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோடிக் சிஸ்டம் அறிமுகம்

February 19, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் முதன் முதலாக கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முழுமையான ரோபோடிக் சிஸ்டத்தை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார்.

மருத்துவ துறையில்,குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து வருகிறது.இந்நிலையில் அந்த வகையில் மூட்டு மாற்று சிகிச்சை முறையில் ரோபோட்டிக் சிஸ்டத்தை கோவை ரெக்ஸ் மருத்தூவமனை அறிமுகம் செய்துள்ளது.இதற்கான அறிமுக விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் டாக்டர் ரெக்ஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு புதிய மூட்டு மாற்று ரோபோட்டிக் சிஸ்டத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர்,மனிதர்கள் மகிழ்ச்சியாக நோயற்ற ஆரோக்கிய வாழ்வு அவசியம் எனவும், அதற்கு மருத்துவர்களே மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.மருத்திவ துறையில் நவீன மாற்றங்கள் வருவது மனித குலத்திற்கு பயனளிக்க கூடியதாக இருப்பதாகவும்,தற்போது நவீன மருத்திவ உபகரணங்கள் மனிதனின் உடல் செயல்பாடுகளை பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ள இந்த ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் துல்லியமாக சிகிச்சை செய்வதோடு நோயாளிகள் விரைவில் குணமடையவும் முடியும் என மருத்துவர் ரெக்ஸ் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவர் மருத்துவர் சிங்காரவேலு, செயலாளர் மருத்துவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க