• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.50 இல்லாததால் சிறுவன் பலி

August 22, 2017 தண்டோரா குழு

ராஞ்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை தொகையில் 50 ரூபாய் குறைந்ததால்,’சிடி’ ஸ்கேன் எடுக்க முடியாமல், ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியை சேர்ந்த சிறுவன், வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்தால், அவனுடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவனுடைய பெற்றோர்கள் ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் தலையில் ஏற்பட்ட காயம் குறித்து, தெரிந்துக்கொள்ள, அவனுக்கு சிடி ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற தெரிவித்தனர்.

இதையடுத்து, அவனுடைய தந்தை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு மகனை அழைத்து சென்றுள்ளார். அந்த ஸ்கேன் செய்ய 1,350 ரூபாய் செலுத்தவேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். எதிர்பாராதவிதமாக, அந்த சிறுவனின் தந்தையிடம் 1,300 ரூபாய் மட்டுமே இருந்தது. மீதி இருந்த 50 ரூபாயை எப்படியாவது கட்டிவிடுகிறேன் என்று அவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் 50 ரூபாயை செலுத்தினால் தான், சிறுவனுக்கு ஸ்கேன் எடுக்கப்படும் என்று கூறிவிட்டனர்.இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால்,அந்தக் குழந்தை, பரிதாபமாக இறந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2015ம் ஆண்டு, விபத்து காரணமாக, மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட 2 பேர், மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால், பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கடந்த 2016ம் ஆண்டு, பிரசவ வலியால், மருத்துவமனையில் ஒரு பெண் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். ஆனால், வயிற்றில் இறந்த குழந்தையை இரண்டு நாள் ஆகியும் வெளியே எடுக்கவில்லை. இதனால், அந்த பெண்ணின் உடல்நலம் மோசாகி கொண்டே இருந்தது. அந்த பெண்ணின் ரத்த வகை இல்லாததால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க