• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள் ; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

March 30, 2017 A.T ஜாகர்

கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் கடந்த சில மாதங்களாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியவும் பல முறை அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் “10 ரூபாய் நாணயம் சட்டபூர்வமாக செல்லும். வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என்றது. ஆனாலும் கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வர வில்லை.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் நடத்துனர்கள் அதனை வாங்க மறுத்து பாதி வழியிலேயே அவர்களை இறங்க்கிவிடப்பட்ட சம்பவங்களும் கோவையில் சில இடங்களில் அரங்கேறி வருகின்றன. பொதுமக்களும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மயிலானந்தனம் கூறுகையில் “ கூலி வேலைக்கு செல்லும் ஏழை,எளிய மக்கள் இந்த பிரச்சனையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். சிறு கடைகளில் ஆரம்பித்து பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனை மக்களிடம் தெளிவுப்படுத்த தமிழக அரசாங்கம் முன் வர வேண்டும்.” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மார்ச் 9-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்” ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, 10 ரூபாய் நாணயம் சட்டபூர்வமாக செல்லக்கூடியதாகும். ஆகவே, பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி 10ரூபாய் நாணயங்கள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம். அவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

மாவட்ட நீர்வாகமும், அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்தும் கூட இன்னமும் பல இடங்களில் குறிப்பாக சில அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க