• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.1 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர் கைது

April 21, 2023 தண்டோரா குழு

கோவை கே.ஆர்.புரம் அருகே முருகன் கோயில் வீதியை செந்தில் வடிவேல் இவர் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பேஸ்புக் மூலம் அறிமுகமான முத்துபாலாஜி என்பவர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அதன் மூலம் அதிக இலாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து செந்தில் வடிவேலுவிடம் இருந்து ஒரு லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் எந்தவித முதலீடும் செய்யாமல், பணத்தையும் திருப்பி தராமல் முத்துபாலாஜி இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த கோவை சைபர் கிரைம் போலீஸாரிடம் செந்தில் வடிவேலு புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று முத்து பாலாஜியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் முத்துபாலாஜி. பி.இ. படித்திருக்கிறார். இவர் குற்ற செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன், 4 சிம்கார்டுகள் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்றனர்.

மேலும் படிக்க