• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபெல்லா தடுப்பூசி முகாம் 14 நாள் நீடிப்பு

March 1, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் புதன்கிழமை முதல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தட்டம்மை போன்ற நோய்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயது வரையிலான இளைஞர் வரையில் இத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

இதனிடையில் தமிழகத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

“ரூபெல்லா தடுப்பூசியைப் போடுவதால் குழந்தைகளுக்குப் பக்க விளைவோ, பாதிப்போ ஏற்படாது. இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. ரூபெல்லா தடுப்பூசி பற்றி சமூக வலைதளங்களில் உலா வரும் தவறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். ரூ.1,000 மதிப்புள்ள இந்த தடுப்பூசி பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக போடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு ருபெல்லா ஊசி போடுவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம் தேவையில்லை” என்றார்.

தட்டம்மை போன்ற நோய்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கான முகாம் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்த முகாம் புதன்கிழமை முதல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க