• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபிக் கியூப் விளையாட்டில் உலக சாதனை படைத்த கோவையை சேர்ந்த 3 வயது சிறுமி

June 4, 2023 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த Dr.விஜய் ஆனந்த், Dr.ஷோபி ஆனந்தி ஆகியோரின் மூன்று வயது குழந்தை அஹன்யா.
இவர் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் Mont-2 படித்து வருகிறார்.

இச்சிறுமி ரூபிக் கியூப் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். அவர் வெறும் மூன்றே வயதில் 2×2, பிராமின்க்ஸ் & 3×3 ஆகிய மூன்று வேறு விதமான ரூபிக் கியூப்களை வெறும் நான்கு நிமிடங்கள் ஐம்பத்தைந்து வினாடிகளில் சேர்த்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று தமிழ்நாடு கியூப் அசோசியேஷன் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் சிறுமி அஹன்யாவிற்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.

மேலும் படிக்க