July 24, 2025
தண்டோரா குழு
கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிசியா நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மனை பிரிவுகள் விற்பனை திட்டத்தை துவங்கி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை காளப்பட்டி அருகே உள்ள ஒன் வேர்ல்டு எனும் புதிய மனை பிரிவுகள் விற்பனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.அனைத்து வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ள ஒன் வேர்ல்டு வீட்டுமனை விற்பனையை அடிசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்கள் வரிசையில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருவதாக தெரிவித்த அவர்,முன்னனி ஐ.டி.நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறையினர் கோவைக்கு படையெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதனால் ரியல் எஸ்டேட் துறை கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்வதாக குறிப்பிட்ட அவர், வீட்டுமனைகள் உருவாக்கத்தில் கோவை மாநகரின் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டான அடிசியா கோவையில் தனது புதிய மனை பிரிவு விற்பனை திட்டங்களை துவக்கி வருவதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள ஒன் வேர்ல்டு மனை பிரிவுகளில், மனை வாங்குபவர்களுக்கு, சாலைகள்,மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள்,வழிபாட்டு தளங்களாக சர்ச்,மசூதி,மற்றும் கோவில் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக இந்திய இராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு 5 சதவீத சிறப்பு சலுகை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்