• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரிச்சர்ட் பீலேவிடம் வைகோ விசிடிங் கார்டு வாங்கினாரா ?

February 6, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரைச் சந்திக்க வந்த வைகோவிற்கு விசிட்டிங் கார்டு கொடுத்தது உண்மைதான் என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில்,ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவினர் திங்களன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்ற வைகோ, நிருபர்களிடம் பேசியபோது, மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடம் விசிட்டிங் கார்டைப் பெற்றதாகத் தெரிவித்திருந்தார். அந்த செய்தி அப்போது சமூக வலை தளங்களில் பரவியது.

இது தொடர்பாக லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலேயிடம் ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்த பீலே “மருத்துவமனைக்கு வந்து வைகோ தன்னைச் சந்தித்து விசிட்டிங் கார்டடு பெற்றது உண்மைதான். நான் யாரைச் சந்தித்தாலும் எனது விசிட்டிங் கார்டைக் கொடுப்பேன்” என்று பதிலளித்தார்

மேலும் படிக்க