• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி

March 10, 2022 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்களை கௌரவிக்கும் விழா கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை நடைபெற்றது.இதில் கல்லூரி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.மகப்பேறு மருத்துவர் டாக்டர் கல்யாணகுமாரி சிறப்புரையாற்றினார்.விழாவில் சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில்,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பெண்களுக்கான சம உரிமைகள் குறித்தும்,வாய்ப்புகள்,மற்றும் மேம்பாடு குறித்து பேசினர்.

விழாவில் மருத்துவமனை மருத்துவர் பரமானந்தம்,இயக்குனர் பரந்தாமன் உட்பட செவிலியர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க