ராயல் கேர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிறுநீரக தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
சிறுநீரக பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் சிறுநீரக தினத்தையொட்டி ராயல் கேர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பாக சிறுநீரக விழிப்புணர்வு நடைபயணம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
பொதுமக்களிடையே சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதனை மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி கொடியசைத்து துவக்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிறுநீரக பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளதாகவும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் ஆரம்ப நிலையிலேயே தகுந்த பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.ஆனால் பெரும்பாலோனொர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு,நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை பெற்றால் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தடுக்க முடியும் என்றார்.
தாமஸ் பார்க் பகுதியில் துவங்கிய நடைபயணத்தில் சிறுநீரக மருத்துவ நிபுணர் முருகானந்தம்,மருத்துவர் ஜெரார்ட்,மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கடேஷ் உட்பட பேரூர் தமிழ் கல்லூரி மாணவ, மாணவியர், மருத்துவர்கள்,பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது