October 12, 2025
தண்டோரா குழு
கோயம்புத்தூரின் பிரபலமான செட்டிநாடு உணவக நிறுவனங்களில் ஒன்றான ராயப்பாஸ், கோல்ட்வின்ஸில் தனது புதிய கிளையை சனிக்கிழமை அன்று திறந்தது.
வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், ராயப்பாஸ் உரிமையாளர் திரு.பாபு மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில் உணவகத்தை திறந்து வைத்தார்.
உணவகத்தின் மேலாளர் ராஜசேகர் செய்தியர்களிடம் பேசுகையில்,
பிரியாணிகளின் சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக பிரியாணி வகைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.செட்டிநாடு உணவுகளை தங்களது பிரத்தியேக சமையல் பக்குவத்துடன் இணைத்து சுவையான உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
“மீன் உணவு வகைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். எங்களிடம் 15 வகையான மீன் வகைகள் உள்ளன. அவை கேரளா மற்றும் செட்டிநாடு பாணியின் கலவையாக இருக்கும், மேலும் தனித்துவமாகவும் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
ருசியான பல்வேறு வகை மட்டன் உணவுகளும் வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைக்கும். இது தவிர, இடியாப்பம்-தலைக்கறி, இட்லி-தலைக்கறி, ஆப்பம் – நாட்டுக்கோழி குழம்பு போன்ற சிறப்பு மாலை நேர காம்போக்களும் வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும் என அவர் கூறினார்.