January 30, 2021
தண்டோரா குழு
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்கு நாளை முதல் தமிழகத்தில் நண்கொடை பெறவிருக்கிறோம் என ராஷ்ட்ரிய சேவா பாரதியின் தலைவர் மானனீய பன்னலால் பன்சாலி தெரிவித்தார்.
சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் மானனீய பன்னலால் பன்சாலி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா காலத்தில், சேவாபாரதியின் கோவையில் ஒரு நாளைக்கு 30000 உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தில், சேவா பாரதியை பற்றி இதுவரை அறியாத்வர்கள் கூட இந்த பேரிடர் காலத்தில், அமைப்பின் சேவையை அறிந்து பாராட்டினர். நேற்று திருப்பூரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசியுள்ளோம். பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள திருப்பூரிலிருந்து, சமூக பணிகளிலும் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது. அதே போல் கோவையில் இன்று தலைசிறந்த மருத்துவர்களுடான சந்திப்பு நடந்தது. சேவா ஹெல்த் சென்டர்கள் மூலம் இலசவ மருத்துவம் பார்க்கப்படுகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் முடியாதவர்களுகு ,கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிகள் சிலவற்றில் “ட்ரைபல் ஹெல்த் சென்டர்கள்” அமைத்து அவர்க்ளுகான இலவச மருத்துவ உதவி வழங்கப்படும் என்றார்.
ராஷ்ட்ரிய சேவா பாரதியில், 507656 தொண்டர்களுடன் 92656 சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த கொரோனா காலத்தில்,சுமார் 73,81,800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் சுமார் 4,66,34,000 உணவு பொட்டலங்கள் மற்றும் சுமார் 89,23,000 முக கவசங்கள் வழங்கப்படுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் சேவா பாரதி மூலம் செய்யப்பட்டுள்ளது.
அயோதியில் கட்டப்படும் ராமர் கோயில், சிமெண்ட், கம்பிகள் இல்லாமல், வெறும் கருங்கட்டலால் கட்டப்படுகிறது. 1000 ஆண்டுகள ஆனாலும் உறுதியுடன் இருக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் அல்ல உலக அளவில் போற்றப்படக்கூடிய அளவில் இருக்க போகும் இக்கோவில் கட்டுவதற்கு, நாளை முதல் தமிழகத்தில் இருந்து நன்கொடைகளை பெறப்படும் என்றார்.