• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமர் கோயில் கட்டப்படும், 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு! – பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

April 8, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான 45 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பிக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் இன்று நடந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற நிகழ்ச்சியில் பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 130 கோடி இந்தியர்களை மனதில் வைத்தும். பல்வேறு துறையில் இருக்கும் நபர்களிடமிருந்து கருத்து கேட்ட பின்னரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பாஜக கூறியுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

•விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

•குறைந்த கால கடனாக ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும் விவசாயக்கடன்களுக்கு வட்டி கிடையாது.

•தேசிய பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை தரும்.

•விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரடிட் கார்டு வழங்கப்படும்.

•2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

•தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்கப்படும்

•அயோத்தியில் ராமர் கோயில் மீண்டும் கட்டப்படும்

•உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 100 கோடி முதலீடு செய்யப்படும்

•60 வயதுக்கு மேற்பட்ட சிறுகுறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

•கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்படும்

•அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மேலும் எளிதாக்கப்படும்

•2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமான இரட்டிப்பாக்கப்படும்

•2030-க்குள் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்

•சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

•நாடு முழுவதும் புதிய 75 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்படும்

•குடியுரிமை சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும்

•அனைத்து ரயில் தடங்களும் 2022-க்குள் மின்மயமாக்கப்படும்

•மகளிருக்காக 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்

•நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

•கல்வி, சுகாதாரம் அனைவருக்கும் வழங்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

•ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும்.

•வணிகர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு திட்டம் ஏற்படுத்தப்படும்.

•நீர்ப்பாசன திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

•தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.

•நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

•அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

•2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரண்டு மடங்காக விரிவாக்கம் செய்யப்படும்.

•கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

•நாடு முழுவதும் 150 புதிய விமான நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

•2022-க்குள் நாடு முழுவதும் அனைத்து ரயில் பாதைகளும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும்.

மேலும் படிக்க