• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு

May 19, 2022 தண்டோரா குழு

அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம்.இவர் கடந்த 2012 மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்படி திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயத்தை ரவுடிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது.

அவர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடிவருகின்றனர். கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளனர். இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க