ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஒவ்வொரு ஆண்டும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வெற்றி கோப்பை (RKMV TROPHY) என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் விளையாட்டுப்போட்டிகள் 14 மற்றும் 15 ஆகஸ்ட் 2024 தேதிகளில் ராமகிருஷ்ணா மிஷன்,விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டன.
இதில்,பார்வையற்றோருக்கான
கையுந்துப்பந்து,பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து,அமர்வு கையுந்துப்பந்து,காது கேளாதோருக்கான கபாடி,மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஐவர் கால்பந்து, சக்கர நாற்காலி இறகுப்பந்து,சக்கர நாற்காலி மேசைப்பந்து,உடல் ஊனமுற்றோருக்கான அமர்வு கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசுகள் விபரம் :
முதல் பரிசு:20000 ரூபாய்; (WCB -7000 ரூபாய்) + கோப்பை + சான்றிதழ்
இரண்டாம் பரிசு:18000 ரூபாய்;(WCB -6000 ரூபாய்) + கோப்பை + சான்றிதழ்
மூன்றாம் பரிசு:16000 ரூபாய்;( WCB – 5000 ரூபாய் ) + கோப்பை + சான்றிதழ்
நான்காம் பரிசு: 14000 ரூபாய் ( WCB – 4000 ரூபாய் ) + கோப்பை + சான்றிதழ்
தமிழகமெங்கிருந்தும் ஏறத்தாழ 700 மாற்றுத் திறனாளிகள் இந்த போட்டிகளில் பங்கு கொண்டனர்.காலை மங்கல இசையுடன் ஒன்பது மணிக்கு இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆரம்பமானது.கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் மூத்தப்பட்டைய கணக்கறிஞர் அழகிரிசுவாமி கோவை , ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ( விவேகானந்தா பல்கலைக்கழகம் ) துணை நிர்வாக இயக்குனர் சுவாமி புத்திதானந்தர் , பல்கலைக்கழகவிளையாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் ஆர் கிரிதரன் ஆகியோர் இந்த விழாவினை துவங்கி வைத்தனர்.
இந்த விழாவின் ஆரம்ப முகமாக தேசியக்கொடியும்,வித்யாலய கொடியும் , பல்கலைக்கழக கொடியும் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்த பெற்றன. எட்டு விளையாட்டு பிரிவுகளில் இந்த மாற்றுத்திறனாளிகள் நாள் முழுவதும் பங்கு பெற்றனர். அடுத்த நாளான சுதந்திர தினத்தன்று இந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவாறு அணிவகுத்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து முந்தைய நாளில் நடைபெற்ற போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளில் பங்கு பெற்றோருக்கான பரிசளிப்பு விழா மாலை 4 மணிக்கு நிறைவு விழாவாக நடைபெற்றது. அதில் பங்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றி பெற்றோருக்குமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள் & பரிசுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமான இரண்டு நாட்களுக்கான உணவு, உறைவிடம் போக்குவரத்து செலவு அனைத்தையும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நிறுவனம் முழு மனதோடு ஏற்றுக்கொண்டது. இது ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!