• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணி எலிசபெத்துக்கு அழைப்பு விடுத்த சிறுவன்

May 9, 2017 தண்டோரா குழு

லண்டனில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் தனது பிறந்த நாள் விழாவிற்கு வருமாறு ராணி எலிசபெத்துக்கு அழைப்பு விடுத்துள்ளான்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஷான் துலே என்னும் 4 வயது இந்திய வம்சவாளியி சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறான்.

அவன் வரும் ஜூன் 25-ம் தன்னுடைய 5-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாட உள்ளான். அந்த விழாவிற்கு வருமாறு இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு அவன் அழைப்பு விடுத்துள்ளான். அவனுடைய அழைப்பை பெற்றுக்கொண்ட ராணி எலிசபெத் அவனுக்கு மறுமொழி கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறுவன் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள ராணி எலிசபெத், உலகிலேயே நீங்கள் தான் சிறந்த அரசி என்று நினைக்கிறேன். நீங்கள் அணிதிருக்கும் கிரீடமும் சிவப்பு அங்கியும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நீங்கள் சூப்பர் ஹீரோவாக இருக்கிறீர்கள். உங்களுடைய குதிரைகள், விமானங்கள் மற்றும் ஏழை குழந்தைகளை குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்களுடைய செல்ல பிராணிகளை ரொம்ப பிடிக்கும். கோடை விடுமுறையில் அவைகளை பார்க்க விரும்புகிறேன்” என்று எழுதியிருந்தான்.

ஷான் தன்னுடைய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தான். ஆனால், பதில் ஏதும் வராததால், நம்பிக்கையை இழக்க தொடங்கினான். அப்படிப்பட்ட நேரத்தில் தான், ராஜா முத்திரை பதித்த கடிதம் ஒன்று அவனுக்கு வந்தது.

அதில் “ராணியின் அதிக வேலை நிமித்தம் காரணமாக, அவரால் உன்னுடைய அழைப்பை ஏற்க முடியவில்லை. உன்னுடைய அன்பான நினைப்பை அவர் வெகுவாக பாராட்டினார். உனக்கு குதிரைகள் மீது இருக்கும் பிரியத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். ஜூன் 25-ம் தேதி, நீ கொண்டாடயிருக்கும் பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்” என்று ராணி எலிசபெத் சார்பாக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வந்திருந்த கடிதத்தில் எழுதிபட்டிருந்தது

ஷானின் தாயார் பலிஜிந்தர் கூறுகையில், “அவனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது என்றேன். உடனே அவர் ராணியிடமிருந்தா? என்று கேட்டான். வீடு திரும்பியதும், அவனிடம் அந்த கடிதத்தை தந்தேன். அதை படித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவனுடைய கோடை விடுமுறை நாட்களில் அவனை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்து செல்வோம் என்று கூறியதும் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தான்” என்றார்.

ஷான் கூறுகையில், “எனக்கு ராணியை மிகவும் பிடிக்கும். அவருடைய நாய்கள் மற்றும் குதிரைகளையும் பிடிக்கும். கோடை விடுமுறையில் அவருடைய வீட்டிற்கு போகிறேன். அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்று தனது மழலை மொழியில் கூறினான்.

மேலும் படிக்க