• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணிகட் எக்ஸ்பிரஸின் 1௦ பெட்டிகள் தடம்புரண்டது

January 21, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜனவரி 21) ராணிகட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. நல்ல காலமாக இதில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.

இது குறித்து ராஜஸ்தான் வடமேற்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் தருண் ஜெயின் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

காத் கோதம் – ஜெய்சால்மர் எக்ஸ்பிரஸ் (15௦14) ரயிலின் 1௦ பெட்டிகள் தயாத் ஹமிரா-ஜெய்சால்மர் இடையே வெள்ளிக்கிழமை இரவு 1௦.15 மணியளவில் தடம் புரண்டது.

தகவல் அறிந்த மூத்த ரயில்வே அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பயணிகள் வேறு ரயில் மூலம் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். இச்சம்பவத்திற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இதையடுத்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க