June 1, 2018
தண்டோரா குழு
60 ஆண்டுகளுக்கு பின்ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை மற்றும் பட்டத்தரசி லோகமாதேவி சிலை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோவிலிருந்து திருடப்பட்டது.இதன் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.இதற்கிடையில்,சிலை திருடு பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில்,ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள்குஜராத்தில் மீட்கப்பட்டது.வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.குஜராத் மாநிலத்தில் மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜ ராஜ சோழன், உலோகமாதேவி சிலை 60 ஆண்டுகளுக்கு பின்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு பின், ராஜராஜ சோழன்,உலோகமா தேவி சிலைகள் மீண்டும் பெரியகோவிலுக்கு கொண்டுவரப்பட்டன.அப்போது,ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள், சிலைகளுக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.