• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல் காந்தி அறிவித்த 6,000 உதவி தொகை திட்டம் புரட்சிகரமானது – ப.சிதம்பரம்

March 27, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 உதவி தொகை திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி மக்களை கவர்வதர்காக பல்வேறு வாக்குறுதிகளை வாரி இறைத்து கொண்டு இருகின்றனர். இந்த வரிசையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சவால் விடும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வாக்குறுதிகளில் அனைவராலும் மிகவும் பேசப்பட்டவை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி, இதன் மூலம், நாடு முழுவதும், 25 கோடி பேர் பயனடைவர் என குறிப்பிடிருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,

ராகுல் காந்தி அறிவித்த திட்டம் புரட்சிகரமானது. மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் திட்டம். இந்தியாவில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால், 25 கோடி பேருக்கு பலன் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

இதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுத்தப்படும். ஏழைகள் யார் என்று சரியாக கண்டறியப்பட்டு, திட்டம் அமலுக்கு வரும் ” என இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க