• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவுண்ட் டேபிள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம், மரம் நடும்விழா

November 25, 2019 தண்டோரா குழு

கோவை ரவுண்ட் டேபிள் 20 சங்கம் நிழலமயம் தொண்டு நிறுவனம் சார்பில் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தையொட்டி, சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கல்வி நிறுவனங்களில் 160 மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத் தலைவர் பட்டாபிராமன்,
வட்டத்தலைவர் ஆலிஸ் வசந்த் சங்கரா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிழல்மயம் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

2ம் நிகழ்ச்சியின்போது வள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக்கலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் பிரமிதா, சௌந்தர்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதேபோல அன்னூர் காந்திஜி அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வை ராஜி மற்றும் ஒய் மசூம் குழுவினர் நடத்தினர்.

கோவை ராமகிருஷ்ணா மத்திய பள்ளியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான அமர்வில் போவ் சோவ்ஸ் புட்ஸின் நிர்வாக இயக்குநர்
அஸ்வின் காஷ்யப் நீர் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் பட்டாபிராமன், ஆலிமேனாள் தலைவி ஆனி வஞ்சிநாத் கலந்து கொண்டனர். வெள்ளலூர் அரசு பள்ளியில் ஓவியபோட்டியையும் கற்பகம் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து ரத்ததானமுகாமையும் நடத்தின. ப்ரூக் பீல்டு வணிக வளாகத்தில் சுஜாதா மூர்த்தி முன்னிலையில் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தெரு நாடகம் நடத்தினர்.

ஒரு வாரம் விழிப்புணர்வுபேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரூ.1.5 லட்சம் செலவிலான திட்டங்கள் வடக்கு ரவுண்ட் டேபிள் சார்பில் செயல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க