• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவுடி கொலையில் 2 பேரை பிடிக்க தனிப்படை

March 10, 2023 தண்டோரா குழு

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). கூலி தொழிலாளி. இவர் மீது பல்வேறு பகுதியில் அடிதடி மோதல் வழக்குகள் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22) என்பவரை சின்னவேடம்பட்டியில் அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கோகுல் முக்கிய குற்றவாளியாக இருந்தார்.

கைதாகி சிறையில் இருந்து வெளியே ஜாமீனில் வந்தார். கடந்த மாதம் 13ம் தேதி காலை 11 மணிக்கு அடிதடி மோதல் வழக்கில் ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு கீரணத்தம் பகுதியை சேர்ந்த தனது நண்பர் மனோஜ் (25) என்பவருடன் கோர்ட் வளாகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். கோபாலபுரம் 2வது வீதியில் கோகுல் சென்ற போது 4 பேர் 2 அடி நீள பட்டா கத்தியுடன் சுற்றி வளைத்து கழுத்தில் வெட்டினர். இதில் ரத்தம் கொட்டிய நிலையில் ரோட்டில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

மனோஜ் வெட்ட முயன்ற கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மனோஜின் தலையில் வெட்டினார். பின்னர், அவர்கள் அருகேயிருந்த பைக்கில் ஏறி தப்பி சென்றனர். இந்த கொலை, குற்றவாளிகள் வெட்டி சென்ற காட்சிகள் அங்கேயிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமி புரத்தை சேர்ந்த ஹரி என்கிற கவுதம் (25), காந்திமாநகரை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரி தில்லை நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (21), சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா (23), சாஸ்திரி நகரை சேர்ந்த டேனியல் (27) என 7 பேரை கைது செய்தனர். இவர்களை கோத்தகிரியில் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி பின்னர் வேனில் கோவை நோக்கி அழைத்து வந்த கொண்டிருந்தனர்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே வந்த போது ஜோஷ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் வாந்தி, மயக்கம் வருகிறது எனக்கூறி வாகனத்தை நிறுத்த வைத்து தப்ப முயன்றனர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதில் 2 பேருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய காந்திபுரத்தை சேர்ந்த விக்ரம், கார்த்திக் பாண்டி, விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட ஞானசேகரன் என்பவர் நீலகிரி மாவட்டத்தில் கோர்ட்டில் சரணடைந்தார். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த சின்னா, சாரதி ஆகியோர் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் கேரளா தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கோகுலை கொலை செய்ய பின் தொடர்ந்து வந்த ரவுடி கும்பல், பல இடங்களில் காத்திருந்தனர். கோர்ட் அருகே கொலை செய்ய முடியாவிட்டால் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், அங்கே கொலை செய்ய முடியாவிட்டால், கீரணத்தம் பகுதியிலும் கொலை செய்ய இவர்கள் இடங்களை தேர்வு செய்து காத்திருந்துள்ளனர்.

சின்னா, சாரதி கீரணத்தம் பகுதியில் கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்ததாக தெரிகிறது. இந்த 2 பேரையும் பிடிக்க நகர போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் இவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க